திண்டுக்கல், ஜூலை 3: கிணற்றில் கால் தவறி விழுந்த பள்ளிச் சிறுவன் நீரில் மூழ்கி பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் வெரியப்பூரைச் சேர்ந்த பச்சைமணியின் மகன் சரவணன் (15).
இவர் நிலக்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சனிக்கிழமை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வசந்த நகரில் தனியார் தோட்டத்துப் பக்கம் அவர் சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கிய சரவணன் உயிரிழந்தார்.
நிலக்கோட்டை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.