சாயல்குடி, ஜூலை 3: சாயல்குடி அருகே பனை மரத்தில் இருந்து தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து சனிக்கிழமை இறந்தார்.
உறைக்கிணறு ஆனந்த நகரைச் சேர்ந்தவர் பனைத் தொழிலாளி அந்தோணி சவரிமுத்து (55). பனை மரத்தில் ஏறி, பதனீர் பாளையை அந்தோணி சவரிமுத்து சீவிக் கொண்டிருந்தாராம். அப்போது, காற்று பலமாக வீசியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அந்தோணி சவரிமுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் குறித்து சாயல்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜெ யராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, அந்தோணி சவரிமுத்து சடலத்தைக் கைப்ப ற்றி விசாரணை நடத்தினர்.