பரமக்குடி, ஜூலை 3: பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, முதலிடம் பெற்ற மாணவர்கள் கோவிந்தராஜ், கனிமொழி, இந்துமதி, காவியா, சரண்யா ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேசவன், பொருளாளர் சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் ராமசுந்தரம் வரவேற்றார்.
ஆசிரியர் மீ.சீனிவாசன் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்துப் பேசினார். உதவி தலைமையாசிரியர் உ.பால்கண்ணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் அ.சத்யா நன்றி கூறினார்.