பிரண்டை செடியை சாகுபடி செய்ய வேளாண் துறை அதிகாரிகள் யோசனை

காரியாபட்டி, ஜூலை 3: காரியாபட்டி பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை செடியை சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.   வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:  
Published on
Updated on
1 min read

காரியாபட்டி, ஜூலை 3: காரியாபட்டி பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை செடியை சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

  வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

  மூலிகை சாகுபடி செய்வோரை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மூலிகை சாகுபடி செய்ய விரும்புவோர் பிரண்டை செடியை சாகுபடி செய்து பயனடையலாம். பிரண்டை செடியில் கால்சியம், புரோட்டின், சி ஊட்டச்சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன.  

  பிரண்டை ஆண்மைக் குறைவு, ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகள், சோம்பல், பசியின்மை, ருசியின்மை, எலும்பு முறிவு, வாய்ப்புண், வாய்நாற்றம், அல்சர், மூலம், பொலிவற்ற சருமம், ஆஸ்துமா, நீரழிவு, கண்பார்வை கோளாறு, கண் எரிச்சல், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு நிவாரணம் தரும் அருமருந்தாக உள்ளது. பல்வேறு இயற்கை மருத்துவ தயாரிப்புகளில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

  பிரண்டையின் வேர், தண்டு, இலை, பூ, காய் என அனைத்து பகுதிகளும் பல வகைகளில் பயன்படுகின்றன. பிரண்டையை ஒரு முறை சாகுபடி செய்து காபி, தேயிலை பயிர்களைப் போன்று பலமுறை அறுவடை செய்து அதிக லாபம் பெறலாம்.

  பிரண்டையின் சாகுபடி நுட்பங்கள் மிகவும் எளிது. ஆடு, மாடுகள் உண்பதில்லை என்பதால் பிரண்டை செடிக்கு வேலி தேவையில்லை. மொட்டை மாடியிலும் இதனை சாகுபடி செய்யலாம். வாரக்கணக்கில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் சாகாது. வறட்சியை தாக்குப்பிடிக்கும் தாவரமாகும். நீர் ஊற்றும்போது திரும்பவும் முளைக்க ஆரம்பிக்கும், பிரண்டையிலிருந்து மருந்து பொருட்கள் மட்டுமின்றி ஊறுகாய், ஜாம், ஜெல்லி போன்ற உணவு பண்டங்களையும் தயாரிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.