ஒட்டன்சத்திரம்,ஜூலை 3: ஒட்டன்சத்திரம் அருகே பெண்ணிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற ஒருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பத்மாவதி (27).
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர் தனியாக பாத்ரூம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தாராம்.
அப்போது இவருக்குப் பின்னால் வந்த நபர், அவரது வாயைப் பொத்தி, கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி திருடன், திருடன் என சத்தம் போட வீட்டில் இருந்து கணவர் பிரசன்னா மற்றும் உறவினர்கள் ஓடி வருவதற்குள் அந்நபர் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. பறிபோன நகையின் மதிப்பு ரூ. 70 ஆயிரம்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸில் பத்மாவதி புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரீட்டா வழக்குப்பதிவு செய்து நகையை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிய நபரைத் தீவிரமாக தேடி வருகிறார்.