மதுரை, ஜூலை 3: மாற்றியமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் டெண்டர் தொடர்பாக ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட உள்ளதாக டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஜெ.ராகவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் 2011-12-ம் ஆண்டுக்கான பார்கள் டெண்டர் விடப்பட்டதில் 131 மதுபானக் கூடங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
மீதமுள்ள மதுக்கூடங்களை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகள் டாஸ்மாக் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு ஒரிரு நாள்களில் முடிவு செய்யப்படும். இதனால் அரசுக்கு நிதியிழப்பு ஏதும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.