ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

தேனி, ஜூலை 3:÷தேனியில் கூட்டுறவுச் சங்க நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ÷கூட்டத்துக்கு, ப
Published on
Updated on
1 min read

தேனி, ஜூலை 3:÷தேனியில் கூட்டுறவுச் சங்க நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு, பொது விநியோகத் திட்டத் துணைப் பதிவாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். நியாய விலைக் கடைகளில் வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகளைத் திறந்து வைத்து பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும். பொருள்களை எடை குறைவின்றி வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதத்தில் உள்ள அனைத்து நாள்களிலும் பொருள் விநியோகம் செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ÷

கூட்டுறவுச் சங்கங்களின் சார்பதிவாளர்கள், வட்டார வழங்கல் அலுவலர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.