விபத்தில் இளைஞர் சாவு; சாலை மறியல்

திண்டுக்கல், ஜூலை 3: லாரி - இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.  இதையடுத்து, வேகத்தடை அமைக்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுட்டதால் நத்தம்-திண்டுக்கல் சாலையில் சுமார் அரைமணி நே
Published on
Updated on
1 min read

திண்டுக்கல், ஜூலை 3: லாரி - இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.

 இதையடுத்து, வேகத்தடை அமைக்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுட்டதால் நத்தம்-திண்டுக்கல் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 திண்டுக்கல் தாலுகா, காவல் சரகம் ரெண்டலபாறை இந்திரா நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (20).

 இவர் திண்டுக்கல்லில் இருந்து ரெட்டியபட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

 ரெண்டலபாறை அருகே திண்டுக்கல் நோக்கி வந்த வேன், பிரபாகரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும், பொது மக்களும் சம்பவ இடத்தில் வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த தாலுகா போலீஸôர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.  இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.