ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 3: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில், கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்த முட்புதர்கள், செடிகள் சுத்தம் செய்யப்பட்டன.
ரயில் நிலையத்தின் முன்புறம் மற்றும் ரயில் பாதையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
திட்ட அலுவலர்கள் கு.தங்கராஜ், என்.கார்த்திக், கா.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.