ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 3: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகக் கட்டடம் மறு சீரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகக் கட்டடம் 1911-ம் ஆண்டு கட்டப்பட்டது. இக் கட்டடம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. பழமை வாய்ந்த இந்த கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் ரூ.4.47 லட்சம் செலவில் நடைபெற்றன.
இதன் திறப்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின காப்பாளர் எஸ்.ஏ.ராஜூ முன்னிலையில் நடைபெற்றது. வனச்சரக அலுவலர் அ.பழனிராஜ் வரவேற்றார்.
மண்டல வனப் பாதுகாவலர் முனைவர் சேகர்குமார் நிரஞ்ச், குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வனக்காப்பாளர் வீ.சண்முகவேல், வனவர் கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.