ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 9: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி நித்யாவுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் நித்யாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் அறக்கட்டளை சார்பில் ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் தஞ்சை பெரிய கோயில் நினைவுப் பரிசு வழங்கினார்.
அறக்கட்டளைத் தலைவர் ஆத்தியப்பன் ரூ.1010 ரொக்கப் பரிசு வழங்கி மாணவியைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தர், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.