சாயல்குடி, ஜூலை 9: சாயல்குடி அருகே கடன் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், பெண் உள்பட இருவர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.
வாலிநோக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி (40), முனியசாமி (40).
மீனவர் கூட்டுறவுச் சங்கம் மூலம், கடன் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் இவர்கள் மோதிக் கொண்டனராம். இதில் கருப்பசாமியின் மனைவி முருகவள்ளி (53), முனியசாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து வாலிநோக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் வழக்குப்பதிந்து கருப்பசாமி, அவரது மனைவி காளியம்மாள், முனியசாமி அவரது மனைவி முருகவள்ளி ஆகியோர் மீது இரு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.