ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 9: ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகனின் 12 வயது மகளை மானபங்கம் செய்ததாக, பக்கத்து வீட்டு இளைஞர் ஜெயமணியை (34) போலீஸôர் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய் பழனியம்மாள், இவரது தங்கை, தங்கையின் கணவர் ஆகியோர் ஜெயமணியை தட்டிக் கேட்கச் சென்றபோது, அவர் ஆபாசமாகப் பேசி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து ஜெயமணியை கைது செய்தனர்.