சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சிவகாசி, ஜூலை 9:  சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே. சுரேஷ்தர்ஹர் தலைமை வகித்தார்.   செயலாளர் எல்.அசோக் அறிக்கை வாசித்தார்.   
Published on

சிவகாசி, ஜூலை 9:  சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே. சுரேஷ்தர்ஹர் தலைமை வகித்தார்.

  செயலாளர் எல்.அசோக் அறிக்கை வாசித்தார்.

   புதிய தலைவர் டி. சுனைராஜா, துணைத் தலைவர் வியராஜப்பன், செயலாளர் டி. சக்திவேல்ராஜா, பொருளாளர் ஏ. ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சங்க மாவட்ட ஆளுநர்(தேர்வு) ஹெச். ஷாஜஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

   உதவி ஆளுநர் ஜி.வி. கார்த்திக் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.

   பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு பைகள் வழங்கப்பட்டன.

 நிகழ்ச்சியில், முன்னாள் உதவி ஆளுநர்கள் பாஸ்கர்ராஜ், ஜபருல்லா, முன்னாள் தலைவர்கள் கதிரேசன், மோகன், அண்ணாமலையான், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்