விருதுநகர், ஜூலை 9: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். கணேசன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், மாநில அமைப்புச் செயலர் மணிமாறன் தேர்தல் ஆணையாளராகச் செயல்பட்டார்.
இதில் மாவட்டத் தலைவராக எஸ். கணேசன், செயலாளராக எஸ். முகமது செரிப், பொருளாளராக சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்களாக கே.கோபால், ஆதிராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
1988 முதல் 1996 வரையில் அய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியை இணைத்து, ஓய்வூதியர்களுக்கு வழங்குவதுபோல, அவர்களுக்கும் வழங்க வேண்டும். பல அரசு அலுவலகங்களில் ஆறாவது நிலுவைத் தொகை, மூன்றாவது நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பது குறித்து ஆட்சியர் புகார் செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்களும், பொதுமக்களும் வங்கியில் வரவு செலவுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால், கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என வங்கிகளையும் கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.