சாத்தூர், ஜூலை 9: சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் சரவெடி பட்டாசு பின்னும்போது திடீரென தீப்பற்றி வெடித்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.
சாத்தூர் அருகே கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35). இவர் தனது வீட்டில் அனுமதியின்றி சரவெடி பட்டாசு பின்னும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசில் தீப்பற்றி வெடித்தது. வெடி சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் மாணிக்கம், மனைவி லட்சுமி (30), மகள் ஜெயஸ்ரீ (1) ஆகிய மூவரும் காயமடைந்து சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏழாயிரம்பண்னை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.