பரமக்குடி, ஜூலை 9: பரமக்குடி டி.இ.எல்.சி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு காப்பீட்டு ஊழியர் சங்கம், பரமக்குடி கிளை மகளிர் துணைக்குழு சார்பில் இலவச சீருடை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிர்வாகி சி. சாம் ஜெபராஜ் ஸ்டீபன்சன் தலைமை வகித்தார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன், செயலாளர் ஏ. ஆனந்தமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி. ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். சந்திரன் வரவேற்றார்.
மகளிர் துணைக்குழு மண்டலப் பொறுப்பாளர் சி. பத்மாவதி, டி.இ.எல்.சி ஆர்ம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் துணைக் குழு நிர்வாகிகள் மற்றும் காப்பீட்டுக் கழக ஊழியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆசிரியை எம். பத்மினி நன்றி கூறினார்.