ராமநாதபுரம்,ஜூலை 9: ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், களரி கிராமத்தில் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வானிலை பருவ மாற்றத்துக்கு ஏற்ற வகையில், விவசாயம் செய்வது தொடர்பான வேளாண் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம், ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், களரி கிராமத்தில் நடைபெற்றது.
மண் ஆய்வின் முக்கியத்துவம்,மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை,மண் வள ஆய்வினால் விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் உத்திகள் ஆகியன குறித்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை அறிவியல் மையத்தின் மண்ணியல் பிரிவு உதவிப் பேராசிரியர் அ.அனுராதா பயிற்சி அளித்தார்.
மண் மாதிரி சேகரிக்கும் முறையின் செயல் விளக்கமும் செய்து காட்டப்பட்டது.
முகாமில் தோட்டக்கலைத்துறை உதவிப் பேராசிரியர் சி.கவிதா,தொழில்நுட்ப திட்ட உதவியாளர் கருணைதாசன் ஆகியோரும் கலந்துகொண்டு வேளாண் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினர்.
வயல்களில் மண் மாதிரி எடுக்கப்பட்டு, மண் வளம் கண்டறியப்பட்டு விளக்கம் தரப்பட்டது.