கமுதி, ஜூலை 9: கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்கப் பள்ளி மற்றும் ஸ்ரீமீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, தேர்வு அட்டை ஆகியவற்றை டாக்டர் பி. பன்னீர்செல்வம் நினைவாக, டாக்டர் எஸ். உமாமகேஸ்வரி வழங்கினார்.
இதேபோன்று, எஸ்.கே. செல்லப்பாண்டியன் நாடார் நினைவாக டாக்டர் எஸ். கே.சி. ஈஸ்வரதாஸ் இலவச பை மற்றும் சிலேடு வழங்கினார்.
தலைமை ஆசிரியர் வி. வேலாயுதம் நினைவாக, ஆசிரியை வேலம்மாள் இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.
கமுதி அரிமா சங்கம் சார்பில், தலைவர் கு. சண்முகராஜ் பாண்டியன் இலவச பேனாவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பா. சோமசுந்தரம், தலைமை ஆசிரியை த. அமிர்தராணி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.