மார்க்சிய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்

சாயல்குடி, ஜூலை 9:    ஏர்வாடி அருகே தார்ச்சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, கிராம மக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர்.  கடலாடி ஊராட்
Published on
Updated on
1 min read

சாயல்குடி, ஜூலை 9:    ஏர்வாடி அருகே தார்ச்சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, கிராம மக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர்.

 கடலாடி ஊராட்சி ஒன்றியம் மூலம், ஏர்வாடியில் இருந்து ராஜாக்கள்பாளையம் வ ழியாக சிறைக்குளம் சாலை வரையிலும், சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நபார்டு வங்கி ரூ. 99 லட்சம் கடனுதவி அளித்துள்ளது. தற்போது 2 கி.மீ. வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

 ஆனால், இச்சாலை மிகவும் மோசமாக தரமற்று, விரைவில் பெயர்ந்துவிடும் படி அமைக்கப்பட்டுள்ளதாக கிராமத்தினர் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

 இதனைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

 இதில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலாடி தாலுகா செயலர் வி. மயில்வாகனன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. பச்சமால், எம். சுப்பிரமணியன், கிளைச் செயலர் ரெங்கராஜ், ராஜாக்கள்பாளையம் கிராமப் பிரமுகர்கள் ரமேஷ், புருஷோத்தமன், மீரா மைதீன், ரியாஸ், குமார், காமராஜர்புரம் கிராமப் பிரமுகர்கள் கருப்பசாமி,  கருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 மறியல் குறித்து தகவல் கிடைத்தவுடன், கடலாடி ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் செல்வராஜ், சிக்கல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

 அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் தார்ச்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.