முல்லைப் பெரியாறு அணையில் சுருக்கி கலவை மாதிரி எடுக்க நிபுணர் குழு ஆய்வு

கம்பம், ஜூலை 9:÷முல்லைப் பெரியாறு அணையை கட்டும்போது பயன்படுத்திய சுருக்கி கலவை மாதிரி எடுப்பதற்காக மத்திய நிபுணர் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். ÷பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஓ
Published on
Updated on
1 min read

கம்பம், ஜூலை 9:÷முல்லைப் பெரியாறு அணையை கட்டும்போது பயன்படுத்திய சுருக்கி கலவை மாதிரி எடுப்பதற்காக மத்திய நிபுணர் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

÷பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இக்குழுவினர், பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர்.

÷இதைத் தொடர்ந்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய மண் மற்றும் பொருள்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் (சி.எஸ்.எம்.ஆர்.எஸ்) ஆய்வு செய்தனர். அணையின் அடிப்பகுதியில் எடுத்த புகைப்படங்களை சீல் வைத்து ஐவர் குழுவிடம் கடந்த மாதம் ஒப்படைத்தனர்.

÷பெரியாறு அணையை கட்டுவதற்கு ஆங்கிலப் பொறியாளர் கர்னல் பென்னிகுக் பயன்படுத்திய சுருக்கி கலவை (மூலிகை, சுண்ணாம்பு, குருமணல், கருப்பட்டி உள்ளிட்ட பொருள்கள் அறைக்கப்பட்ட கலவை) பயன்படுத்தப்பட்டது. ÷இந்த சுருக்கி கலவையின் பலம் குறித்து ஆய்வு நடத்த சி.எஸ்.எம்.ஆர்.எஸ் இயக்குநர்  முராரி ரத்தினம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இதன்படி, சனிக்கிழமை  மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டாக்டர் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் பெரியாறு அணைக்கு வந்தனர்.

÷அணையின் முக்கிய பகுதிகளான மெயின் அணை, பேபி அணை, மதகுப் பகுதிகளைப் பார்வையிட்ட இக்குழுவினர். 1,200 அடி நீளமுள்ள மெயின் அணையில் 330, 600, 900 அடிகளில் குறியிட்டனர். அந்த 3 இடங்களிலும் சுருக்கி கலவை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 2 மணி நேரம் நடைபெற்றது.

÷ஆய்வின்போது, கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகர் என்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள நீர்ப்பாசனத் துறையின் முதன்மைப் பொறியாளர் லலிதாமணி, தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் செல்வராஜ், செயற்பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

÷மத்திய நிபுணர் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியது:÷ஒரு மாதத்தில் நவீன இயந்திரத்தினால் அணைக்குச் சேதம் ஏற்படுத்தாமல் சுருக்கி கலவை மாதிரி எடுப்பது குறித்து விரிவான அறிக்கையை புது தில்லியிலுள்ள சி.எஸ்.எம்.ஆர்.எஸ்-க்கு  அளிக்க உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.