விருதுநகர், ஜூலை 9: விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்கள் பட்டியல்கள் சரிதானா என கிராமத்திற்கு நேரில் சென்று சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல்களில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் விவரங்கள் சரியானவை தானா என்பதற்காகவே இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்பட்டியலில் உள்ள பெயர், தந்தை பெயர், ஊர், வார்டு, வாக்காளர் எண் ஆகியவற்றுடன் சரிபார்க்கப்பட உள்ளது.
பின்னர் கூடுதலாக வாக்காளரின் கைப்பேசி, தொலைபேசி எண் போன்ற விவரங்களும் அதில் சேர்க்கப்பட இருக்கிறது.
அதற்காக வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் இப்பணியை எப்படி மேற்கொள்வது என்பது குறித்த பயிற்சி விரைவில் நடைபெறும் என சம்பந்தப்பட்ட அலுவலக வட்டாரங்களில் தெரிவித்தனர்.