காரைக்குடி, ஜூலை 14: காரைக்குடியில் இயங்கிவரும் தேசியமய வங்கிகள் கல்விக் கடன் வழங்க மறுப்பதாகக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்லல் ஒன்றிய செயலாளர் எஸ். கார்வண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் நா. சாத்தையா, மாநிலக் குழு உறுப்பினர் பிஎல். ராமச்சந்திரன், காரைக்குடி நகரச் செயலாளர் ஏஆர். சீனிவாசன், சாக்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் பிஎல். தினகரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ். பாண்டித்துரை, நகர துணைச் செயலாளர் கண்ணன், மாதர் சங்கத் தலைவி திருக்கம்மாள், இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் ஏஜி. ராஜா, ஒன்றியச் செயலாளர் இ. குமரேசன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் வட்டாட்சியரிடம் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.