காரைக்குடி, ஜூலை 14: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க காரைக்குடி கிளையின் சார்பில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சங்கத் தமிழ்ப் பேரவை 40-வது மாதக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் ம.கார்மேகம் தலைமை வகித்துப் பேசினார். பேராசிரியர் சி.மாதவன் வரவேற்றார். ஐஞ்சிறுங்காப்பியம் உதயன குமாரகாவியம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஆறு. மெய்யாண்டவர் ஆய்வுரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் புலவர் மு.ச. சுப்பிரமணியன், ஜனநேசன், பேராசிரியர் சின்னையா, செ. சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இரா. ஜீவானந்தம் நன்றி கூறினார்.