கோயில் திருவிழாவில் விநோதம்: கழுதை மேல் அமர்ந்து ஊர்வலம்

திண்டுக்கல், ஜூலை 14:÷திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த ஜே.புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவில், சுதந்திரத்துக்கு முன்பிருந்த ஆங்கிலேயர் ஆட்சியை கிண்டல் செய்யும் வகையில் ஆங்கிலே
Published on
Updated on
1 min read

திண்டுக்கல், ஜூலை 14:÷திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த ஜே.புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவில், சுதந்திரத்துக்கு முன்பிருந்த ஆங்கிலேயர் ஆட்சியை கிண்டல் செய்யும் வகையில் ஆங்கிலேயரைப்போல வேஷமிட்டு கழுதை மேல் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

÷சின்னாளபட்டி அருகே சீவல்சரகு ஊராட்சிக்கு உள்பட்ட ஜே.புதுக்கோட்டை முத்தாலம்மன் கோயில் திருவிழா நிறைவு நாளன்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள்  இந்தியர்களை கொடுமைப்படுத்தியதைக் கண்டித்து, அவர்களைக் கேலி செய்யும் வகையில் கழுதை மேல் ஏறி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

÷இந்த ஆண்டு வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்போல வேஷமிட்டவரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஆங்கிலேய ஊழியர்போல வேஷமிட்ட ஒருவர் நிலத்தினை சர்வே செய்வதுபோல நடித்தார். இதைத் தொடர்ந்து கழுதை மேல் அமர்ந்து ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

÷இது குறித்து கவுன்சிலர் கருத்தராஜா கூறியது: ஆங்கிலேயர் காலத்தில்  மக்களை அடிமைப்படுத்தி வந்ததைக் கண்டித்து அவர்கள் குதிரையில் வந்ததற்கு பதிலாக நாங்கள் கழுதை மேல் ஒருவரை வேஷமிட்டு உட்கார வைத்து ஊர்வலம் வரச் செய்கிறோம் என்றார்.

÷விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் ஊர் நாட்டாண்மை சக்திவேல், பூசாரி சக்திவேல், பொன்முருகன்உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.