சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் மாவட்ட சட்டம், ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.நாகராஜன்  தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது
Published on
Updated on
1 min read

திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் மாவட்ட சட்டம், ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.நாகராஜன்  தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

     திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு முழு அமைதி நிலவிட காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பள்ளி நேரங்களில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்திட வேண்டும். பள்ளி மாணவிகளை கட்டாயத் திருமணம் செய்யும் ஆசாமிகளை கைதுசெய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  சாலை விதிகளை வெளிப்படுத்தும் விளம்பரப் பலகைகளை வைத்திட வேண்டும்.   

   திண்டுக்கல்-நத்தம் சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை வைத்திட வேண்டும்.  வேகத்தடைகளில் அதன் அடையாள வண்ணம் பூசப்பட வேண்டும்.  சாலை விதிகளைக் கடைப்பிடித்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

  அளவுக்கு அதிகமாக ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவலர்கள் விழிப்புடன் பணியாற்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

  வாய்க்கால்கள், வடிகால்கள், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமுமின்றி அகற்றிட வேண்டும்.  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள சாக்கடைகளை முழுமையாகச் சுத்தப்படுத்திட வேண்டும்.

   இதற்காக ஒட்டுமொத்த சுத்தப்படுத்தும் பணி இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.  வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் தங்களது துறைகளுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.  பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.  

     கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் பெருமாள், கூ.வேலுச்சாமி, வீரபாண்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேகர், அனைத்து வட்டாட்சியர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.