ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 14: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை மாலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
பேரணியை பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ். அதிகாரி ரமேஷ்ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வுக் கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.
பேரணியில் சாரணர், சாரணிய இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைத் தாளாளர் பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சாரண இயக்க வழிகாட்டி ஆசிரியை அமலி, ஜே.ஆர்.சி. கன்வீனர் கர்ணன், ரெட் ரிப்பன் கிளப் பொறுப்பாளர் லிங்கம், என்.சி.சி. அதிகாரி முரசொலி ஆகியோர் செய்திருந்தனர்.