ராமநாதபுரம்,ஜூலை 14: ராமநாதபுரம் மாவட்ட டென்னிஸ் கழகம் சார்பில் ஆர்.டி.சாரி நினைவு டென்னிஸ் போட்டிகள் நிறைவு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் சீதக்தாதி சேதுபதி விளையாட்டரங்கில் மாவட்ட டென்னிஸ் கழகம் சார்பில் ஆர்.டி.சாரி நினைவு டென்னிஸ் போட்டிகள் இம்மாதம் 2,3 மற்றும் 8,9,10 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு
சங்க மாவட்டத் தலைவர் டாக்டர்.டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி,மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி,செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார்.
விருதுநகர்,சிவகாசி,ஆர்.ஆர்.நகர்,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமநாதபுரம் உள்பட வெவ்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.16வயதுக்கு உட்பட்டோர்,45வயது, மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் விருதுநகர் காஸ்மோபாலிட்டன் கிளப் நிர்வாகி முத்துமணி,ராம்கோ சிமிண்ட்ஸ் துணைத் தலைவர் ரவிசங்கர், மாவட்ட வருவாய் அதிகாரி கி.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பயிற்சி இயக்குநர் பிரபாகரன் நன்றி கூறினார்.
விழாவில் விருதுநகர் மருத்துவர் அசோகன்,எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரி அசோக்குமார்,பத்திரிகையாளர் ஜெய்சங்கர்,டாக்டர்மதுரம் அரவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.