திருவாடானை, ஜூலை 14: திருவாடானை தாலுகா, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, உப்பூர், எஸ்.பி.பட்டினம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் போலியான தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் 50 காசுக்கு விற்க வேண்டிய தண்ணீர் பாக்கெட்டுகள் 2 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுபானக்கடைகளில் 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.