விருதுநகர், ஜூலை 14: விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையின் மீது உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார் வீரபத்திரன (50). இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பொன்மலர் (11) இப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
புதன்கிழமை காலையில் வழக்கம் போல் பள்ளி சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார். அதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் வெளியே அமர்வதற்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த பொன்மலர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டாராம். பின்னர் வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து பார்க்கையில், பொன்மலரின் ஆடையில் தீப்பற்றி எரிந்தது. அதன்பின் தீயை அணைத்து படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந் நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து விருதுநகர் சூலக்கரை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.