பெண் கொலை வழக்கு: இருவர் கைது

கமுதி, ஜூலை 14:      கமுதி அருகே இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பழிக்குப் பழியாக குடிசைக்குள் தூங்கிய பெண்ணை, தீயிட்டு எரித்துக் கொன்றதாக 2 பேரை போலீஸôர், வியாழக்கிழமை கைது செய்தனர்.     அபிராம
Published on
Updated on
2 min read

கமுதி, ஜூலை 14:      கமுதி அருகே இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பழிக்குப் பழியாக குடிசைக்குள் தூங்கிய பெண்ணை, தீயிட்டு எரித்துக் கொன்றதாக 2 பேரை போலீஸôர், வியாழக்கிழமை கைது செய்தனர்.

    அபிராமம் காவல் நிலையச் சரகம் விக்கிரபாண்டிவலசையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சேதுராஜா (50). இவரது மகன் ராமர் (24).

அதே ஊரைச் சேர்ந்த இ ருளாண்டி மகன் உத்திரகுமார் (22) என்பவர் ராமரின் உறவுப் பெண்ணைக் காதலித்து வந்தாராம்.

இதை ராமர் அறிந்து, அந்தப் பெண்ணைக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிற து.

     இதனால் உத்திரகுமார் ஆத்திரமடைந்து ராமரைக் கொலை செய்யத் திட்டமி ட்டாராம்.  ராமர், பரமக்குடியில உள்ள கணினி மையம் ஒன்றுக்கு தினசரி பஸ்ஸில் சென்று படித்து வந்துள்ளார். 11.3.2010-ல் பரமக்குடிக்குச் சென்றிருருந்த ராமர் திரும் பவும் வீட்டுக்கு வரவிலலையாம். இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் ராம ரின் தந்தை சேதுராஜா புகார் செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றி ன் அருகே இளைஞர் ஒருவரது சடலம் கிடந்ததை செம்பட்டி போலீஸôர் கைப்பற்றி, 18-3-2010 அன்று வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இது ராமரின் சடலம் என உறுதி செய்யப்பட்டது.

     இதையடுத்து, ராமரின் சந்தேக மரணம் குறித்து அபிராமம் போலீஸôர்  விசாரணை நடத்தியதில், ராமர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

      தனது காதல் விவகாரத்தில் தலையிட்ட ராமரை உத்திரகுமார், தனது உறவினர் கள் சண்முகவேல் மகன் வடிவேல் (21), வேல்சாமி மகன் சண்முகநாத சேதுபதி ஆகி யோர் உதவியுடன், பரமக்குடியில் இருந்து ஏமாற்றி செம்பட்டிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, புதரில் சடலத்தை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, அபிராமம் போலீஸôர் உத்திரகுமார், வடிவேல், சண்முகநாத சேதுபதி ஆகியோரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

    இந் நிலையில், ராமர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இருளாண்டி மகள் சாந்தகுமாரி (28) என்பவரை கொலை செய்ய சேதுராஜா திட்டமிட்டாராம்.     இதையடுத்து, குடிசைக்குள்  28.6.2010 அன்று நள்ளிரவில் சாந்தகுமாரி தூங்கிக் கொண்டிருந்தபோது, குடிசைக்கு சேதுராஜா, இவரது மைத்துனர் மற்றொரு இருளாண்டி ஆகியோர் சேர்ந்து, தீ வைத்துவிட்டு ஓடி விட்டார்களாம்.

   குடிசை எரிந்ததில், சாந்தகுமாரி உடல் கருகி இறந்தார். சம்பவம் குறித்து விக்கிர பாண்டி கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் அளித்த புகாரின்பேரில், அபிராமம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

    குடிசை தீப்பற்றி எரிந்ததில் சாந்தகுமாரி உடல் கருகி இறந்ததாக முதலில் கருதப்பட்டது. ஆனால், தனது மகள் சாந்தகுமாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை இருளாண்டி புகார் செய்ததன் அடிப்படையில், விசாரணையை போலீஸôர் தீவிரப்படுத்தினர்.

    தற்போதைய டி.ஐ.ஜி. சந்தீப மித்தல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி ஆகியோர் உத்தரவில், பரமக்குடி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக் குமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் முத்துச்சாமி, குணசேகரன், கலைமணி, முத்தழகு ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையை டி.எஸ்..பி. (பொறுப்பு) முரளீ தரன் நியமித்தார்.

     தனி போலீஸ் படையினர் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி, அதனால் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சேதுராஜா, இவரது மைத்துனர் இருளாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

  கமுதி நீதிமன்றத்த்தில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.