சிவகங்கை, ஜூலை 14: மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, சிவகங்கையில் அக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு வி.செüந்தரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. வடிவேலு, வி. முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜபருல்லா, நகரச் செயலாளர் வெ.மதி கண்டன உரையாற்றினர்.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகம், வேலு, மின்வாரிய சிஐடியு தலைவர் பி.உமாநாத், கூட்டுறவு சிஐடியு நிர்வாகி ரவி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.