ராஜபாளையம், ஜூலை 14: ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவியது. புதன்கிழமை மாலை முதல் இதமான காலநிலையும், தென்றல் காற்றும் வீசியது. வியாழக்கிழமை வெயில் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ராஜபாளையத்திற்கு மேற்கேயுள்ள அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் வனப் பகுதிகளில் அடர்ந்த சாரல் மழை பெய்தது.