காரைக்குடி, ஜூலை 14: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் அரண்மனைவயல் கீழச்செட்டிவயல் கிராமத்தில் ஸ்ரீ அடைக்கலங்காத்த அய்யனார் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பூர்ணாபுஸ்கலா சமேத ஸ்ரீ அடைக்கலங்காத்த அய்யனார் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்தன. குடமுழுக்கு விழாவையொட்டி, புதன்கிழமை ஜெயங்கொண்டான் ராஜாமணி அய்யர் குழுவினர் யாகபூஜைகளை தொடங்கினார்.
இப்பூஜைகள் வியாழக்கிழமை 2-ம் காலயாக பூஜையுடன் நிறைவடைந்து காலை 9.45 மணிக்கு கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அடைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது.
விழாவில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் நாட்டுச்சேரி வீரப்பன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.