மதுரை, ஜூலை 23: மதுரை அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சுந்தரேஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்படும் பகுதிகள்: நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை, கரடிப்பட்டி, மேலக்குயில்குடி, வடபழஞ்சி, முத்துப்பட்டி, புதுக்குளம், கீழனேரி, சம்பகுடி, அச்சம்பத்து, துவரிமான், காமாட்சிபுரம், கீழமாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம், வெங்கடாஜலபதி நகர், லாலா சத்திரம்.
சமயநல்லூர் பகுதியில் (திங்கள்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும்.
துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகள்: சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை, பொதும்பு, அலங்காநல்லூர்,டி.மேட்டுப்பட்டி, ஊர்சேரி, வாவிடைமருதூர், விளாங்குடி, சென்ட்ரல் மார்க்கெட்,விஸ்தாரா குடியிருப்பு ஆகிய இடங்கள்.
இத்தகவலை, சமயநல்லூர் மின்வாரியச் செயற்பொறியாளர் வீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.