திருவாடானை, ஜூலை 23: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத் தேர் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியபட்ட ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூரத் தேர் திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேர் திருவிழா, ஆகஸ்ட் 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தத் தேரில், சினேக வல்லி தாயார் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
3-ம் தேதி அம்பாள் ரிசப வாகனத்தில் காட்சியளித்தலும், 4-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும். விழா நாள்களில், காமதேனு, அன்னம், குதிரை, கிளி, கமலம் போனற வாகனங்களில் சினேக வல்லி தாயார் வீதி உலா வருகிறார்.
இதற்கான ஏற்பாட்டினை, செயல் அலுவலர் ராதகிருஷ்ணன் மற்றும் 22 கிராம மக்கள் செய்து வருகின்றனர்.