மதுரை, ஜூலை 23: மதுரை அருகே உள்ள பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் கோ.பகவதிபெருமாள் தலைமையில், உதவி தலைமையாசிரியை ஜகிதா முன்னிலை வகிக்க, தமிழாசிரியர் பியூலா மெர்சிபாய் வரவேற்றார்.
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.ராசமாணிக்கம், மின்வாரிய கணக்கு அலுவலர் சுந்தரராஜன், உதவித் தலைமையாசிரியைகள் சுகுணா, புஷ்பராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழாசிரியை கெüசல்யா நன்றி கூறினார்.