சிவகாசி, ஜூலை 23: சிவகாசியில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பி. முத்துசாமி தலைமை வகித்தார்.
லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி பிச்சைக்கனி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அறிவித்த மணல் குவாரிகள் சட்டப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை. இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து மணல், லாரி ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, உடனடியாக விருதுநகர் மாவட்ட மணல் குவாரிகளைச் செயல்படுத்த வலியுறுத்தியும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க ந
டவடிக்கை எடுக்கக் கோரியும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். தொழிலாளர்கள் அன்று ஊர்வலமாகச் சென்று, கோட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.