சிவகங்கை, ஜூலை 23: சிறுபான்மையினருக்கு எலக்ட்ரிகல் ரீவைண்டிங், பிட்டர், வெல்டர், டெய்லரிங் பிரிவுகளில் 3 மாத இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் சிறுபான்மையினர் நல வாரியம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவ, பெüத்த, சீக்கிய சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்களுக்கு சிவகங்கை சமுதாயக் கல்லூரியில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.
எலக்ட்ரிகல் ரீவைண்டிங், பிட்டர், வெல்டர், டெய்லரிங் ஆகிய பிரிவுகளில் 3 மாத இலவச பயிற்சியில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் - முதல்வர், சிவகங்கை சமுதாயக் கல்லூரி, நியூபேலஸ், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9688341013 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று சமுதாயக் கல்லூரி நிறுவனர் எம்.ஜி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.