ராணுவத்தில் சேர எழுத்துத் தேர்வு: தேனியில் முன்பயிற்சி

மதுரை, ஜூலை 23: கோவையில் நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று எழுத்துத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேனியில் முன்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.   இதுகு
Published on
Updated on
1 min read

மதுரை, ஜூலை 23: கோவையில் நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று எழுத்துத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேனியில் முன்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

  இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

  கோவையில் கடந்த ஜூன் 22 முதல் 27 வரையில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று எழுத்துத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 முன்னாள் படைவீரர் நல இயக்கக ஆணையின்படி தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெறும்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள பயிற்சி கூடத்தில் திங்கள்கிழமை (ஜூலை 25) தொடங்கி இந்த  மாதம் 29 ஆம் தேதி வரையில் இந்த பயிற்சி அளிக்கப்படும்.

  எனவே, எழுத்துத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.