விருதுநகர், ஜூலை 23: பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்தியானந்தா மீதான வழக்கை விரைவுப்படுத்தக் கோரி திராவிடர் கழகத்தின் இளைஞரணி சார்பில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மண்டல இணைச் செயலாளர் இல.திருப்பதி தலைமை வகித்தார். திராவிடர் கழக மகளிர் அணிச் செயலாளர் ராசம், மாணவர் அணிச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் விளக்கவுரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.