மதுரை, ஜூலை 23: மதுரை மாவட்ட வீரசைவ பேரவையின் முப்பெரும் விழா செல்லூரில் நடைபெற்றது.
வைகை வடகரை கிளைத் தலைவர் என்.மணிவேல் தலைமை வகித்தார். மாநில அளவில் பிளஸ் 2 , 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற வீரசைவ சமூக மாணவ, மாணவிகள் 89 பேருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேரவை மாநிலத் தலைவர் எஸ்.நாகரத்தினம், பொருளாளர் யு.பி.ராமையா, மதுரை காவல்துறை உதவி ஆணையர் ஆ.கணேசன், டாக்டர் வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.