விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவத்தில் உடற்கல்வி பயிற்சி பெற்றிருந்தால் அதை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்.
விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
மேலும் உடற்கல்வி பயிற்சியைப் பதிவு செய்யாத முன்னாள் படை வீரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.