பரமக்குடி, ஜூலை 30: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியம், பகைவென்றி கிராமத்தில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் பங்களிப்பு மற்றும் அரசு நிதியாக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டடத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், சிவகங்கை ஆயர் ஜெ.சூசைமாணிக்கம் தலைமை வகித்து அர்ச்சிப்பு செய்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். தேன்மொழி ஞானதீபா குத்துவிளக்கு ஏற்றினார்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெ. பூலோகசுந்தரவிஜயன், ஆர்.சி. பள்ளி கண்காணிப்பாளர் எல். சகாயராஜ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.பி. இந்திராகாந்தி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி. வசந்தி, ஊராட்சித் தலைவர் ஆர்.எம். பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் எஸ்.பிரபாகரன் வரவேற்றார்.
புதிதாகக் கட்டப்பட்ட பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், நயினார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் சுப.த. திவாகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் அருட்சகோதரர் அகஸ்டின், டென்சிங், உதவி பங்குத் தந்தை ஆரோன், கிராம நிர்வாக அலுவலர் ஜி. வேலுச்சாமி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் வி.ராமு, ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வி.பி. ராசு, குழந்தைச்சாமி, உதவி ஆசிரியர் செசிலியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தலைமை ஆசிரியர் எஸ். ஜேம்ஸ்ஸ்டானி பிரபாகர் நன்றி கூறினார்.