ராஜபாளையம், ஜூலை 30: ராஜபாளையத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ராஜபாளையம் இந்திரா நகர் பிச்சை காலனியைச் சேர்ந்தவர் வைரம் (30). இவரது மனைவி ஜான்சிராணி. குடும்பத் தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன் ஜான்சிராணியை வெட்டிக் கொலை செய்தார். இதனால் வைரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்த இவர் வெள்ளிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு தென்றல் நகர் சாலையில் நடந்து சென்றாராம். அப்போது அந்த வழியாக உதயகுமார் என்பவருடன் தகராறு செய்து அரிவாளால் வெட்டினாராம். இதில் உதயகுமார் உயிரிழந்தார்.
பின்னர் வைரம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இடப்பிரச்னை முன்விரோதம் தொடர்பாக வைரம், குருசாமி, அண்ணாத்துரை, அழகாபுரியான், முருகேசன் ஆகியோர் உதயகுமாரைக் கொலை செய்துள்ளதாக துரை புகார் அளித்ததன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.