மதுரை, ஜூலை 30: மதுரை காந்தி மியூசியத்தில் ஒரு மாத கால யோகாசன, பிராணயாம, தியான , சமச்சீர் உணவுப் பயிற்சி திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.
பயிற்சிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணிக்கு ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். இருபாலருக்கும் பயிற்சி கற்றுத் தரப்படும்.
காலையில் நடைபெறும் பயிற்சியில் பெண்கள் மட்டும் சேரலாம்.ஹய், ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சுவாசப் பிரச்னைகள், ஆர்த்தோ பிரச்னைகள் மற்றும் மன அழுத்தப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், காந்தி மியூசியத்தில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 94875 37339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் இரா.ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.