சிவகாசி, ஜூலை 30: சிவகாசி நகர போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பளர் நஜ்மல்ஹோடா தலைமை வகித்தார். நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பி.புருஷோத்தமன் வரவேற்றார்.
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து டாக்ஸி ஸ்டாண்டு வரை சாலையில் டிவைடர் அமைக்க வேண்டும். சிவகாசி-திருத்தங்கல் சாலையில் தேவர் சிலை அருகே அதிகமாக வேகத்தடை உள்ளதை அகற்ற வேண்டும். வேகத்தடை உள்ள இடங்களில் ஒளிரும் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். லாரிகளுக்கு டெர்மினல் அமைக்க வேண்டும். போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
சிவகாசியில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சங்கங்களின் தலைவர் அல்லது செயலாளரைக் கொண்டு ஒரு போக்குவரத்துக் கமிட்டி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. பி.சாமிநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் பி.பெருமாள் ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.