பரமக்குடி, ஜூலை 30: பரமக்குடி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரியில் 15 மையங்களில் சனிக்கிழமை குரூப் 2 தேர்வு நடைபெற்றது.
ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி, செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, அலங்கார மாதா உயர்நிலைப் பள்ளி, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்.என்.வி. மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக்கல்லூரி ஆகிய 15 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இத்தேர்வில், ஒவ்வொரு மையத்திலும் 200 முதல் 260 பேர் என மொத்தம் 4182 பேர் தேர்வு எழுதினர்.
இதில் இரு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.
இவர்களுக்கு உதவியாளர் நியமிக்கப்பட்டு தேர்வெழுதும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எழுதும் தேர்வை, ஒலி பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டது.