புறநகர் பகுதிகளுக்கான மின்தடை நேரம் மாற்றம்

மதுரை, ஜூலை 30: மதுரை புறநகர் பகுதிகளுக்கான ஆகஸ்ட் மாத மின் தடை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கி.தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுர
Published on
Updated on
2 min read

மதுரை, ஜூலை 30: மதுரை புறநகர் பகுதிகளுக்கான ஆகஸ்ட் மாத மின் தடை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கி.தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை ஊரக பகுதிகளில் ஆக. 1 முதல் கீழ்க்கண்டவாறு தினசரி 2 மணி நேர மின்தடை நேரம் அமலில் இருக்கும்.

மின்தடை நேரம் மற்றும் மின்சாரம் தடைபடும் பகுதிகள் வருமாறு:

காலை 6-8: மஹியா தொழிற்பேட்டை,தெற்குத்தெரு, மலைநகர் , மாயாண்டிப்பட்டி, மேலூர் நகர், ஜோதிநகர், சந்தைப்பேட்டை, காந்திநகர், புதூர் தொழிற்பேட்டை, அழகர்கோவில் மெயின் ரோடு, ராமவர்மாநகர், லூர்துநகர், கற்பகநகர், மூன்றுமாவடி,காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர் மெயின் ரோடு, அல்அமின்நகர், ராமலட்சுமி நகர், தொழிற்பேட்டை பகுதி, பிரஸ் காலனி, உசிலம்பட்டி நகராட்சி பகுதிகள், கவணம்பட்டி, கருக்கட்டான்பட்டி, மாமரத்துப்பட்டி, அன்னம்பார்பட்டி,மேலப்புதூர்,கீழப்புதூர், அருணாச்சலம்பட்டி, நகரி ரிஷபம் ரோடு, நகரி தொழிற்பேட்டை, டிவி.நல்லூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்.

காலை 8-10: மெப்கோ தொழிற்சாலை, கப்பலூர் தொழில்பேட்டையில் சிலபகுதிகள்,திருமங்கலம் பாண்டியன் நகர், காமராஜர் புரம், செங்குளம்,திருமங்கலம் நகர், வாடிப்பட்டி, போடி நாயக்கன்பட்டி, நீரேத்தான்பட்டி, ராமநாயக்கன்பட்டி.

காலை 10-12: இளமனூர், ஒட்டப்பனையூர், ராசாக்கூர், பால்பண்ணை, கோமதிபுரம், ஜூப்ளி டவுன், மேலமடை, அன்பு நகர், சதாசிவநகர், ஆவின்நகர், தாசில்தார்நகர், கே.கே.நகர், சுப்பையா காலனி ,லோக்கோஸ்ட் காலனி, ஆட்டுக்குளம்,திருப்பாலை, முனீஸ்வர் நகர், அண்ணாமேடு, பாமாநகர், சசிநகர், விஸ்வநாதன் நகர், பார்க் டவுண், பி-டி நகர், வள்ளுவர் காலனி, முல்லை நகர், நேஷனல் சுகர் மில், இந்தியன் பேங்க் காலனி, திருப்பாலை அன்புநகர், இ.பி.காலனி, இன்ஜினியர்ஸ் காலனி, மீனாட்சி நகர், மையில் நகர், கலைநகர், பழைய நத்தம் ரோடு, கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மாகாந்தி நகர், விஸ்வநாதபுரம், எல்ஐசி காலனி, முல்லை நகர், மருதுபாண்டியன் நகர், பீபீகுளம், சத்தியமூர்த்தி நகர், குருநகர், விஸ்வாசாந்தி நகர், கடச்சனேந்தல், சக்கிலாபுரம், மங்கலகுடி, உத்தங்குடி, உலகநேரி, நரசிங்கம்,சிருதூர், சோழவந்தான் நகர், மண்ணாடிமங்கலம், கருப்பட்டி.

பகல் 12-பிற்பகல் 2: சௌராஷ்டிரா புரம், சங்கர்நகர், 80 அடி ரோடு, அண்ணாநகர், துணை ஆட்சியர் காலனி, வைகை காலனி, ஹவுசிங் போர்டு நகர், வரிச்சூர், செங்கோட்டை, நாட்டார் மங்கலம்,களிமங்கலம்,சக்குடி,வெளத்தூர்,திண்டியூர்,திருமோகூர், ராசாக்கூர், மேலக்கோட்டை, கீழக்கோட்டை,கரிசல்பட்டி, வெள்ளரிப்பட்டி, சிட்டம்பட்டி,காயம்பட்டி, திருக்கானை, இலங்கியேந்தல், பூலாம்பட்டி, நெல்லியேந்தல், விவசாயக் கல்லூரி, கத்தப்பட்டி, மருதூர், விரகனூர், புளியங்குளம்,தும்மக்குண்டு.

பிற்பகல் 2-4: பரவை மெயின் ரோடு, பேங்க் காலனி, மீனாட்சி நகர், கப்பலூர் தொழில்பேட்டையில் சில பகுதிகள், கருப்பாயூரணி, காளிகாப்பான், மஸ்தான்பட்டி, சதாசிவநகர், யாகப்பாநகர், பி.கே.எம்.நகர், சிவரக்கோட்டை, யாதவா கல்லூரி, பொறியாளர் நகர், ட்வாட் காலனி, பாரத் நகர், நத்தம் மெயின்ரோடு, தாகூர் நகர், ஐயர் பங்களா, எழில்நகர், கண்ணநேந்தல், குறிஞ்சிநகர், ஜிஆர்நகர், ஸ்ரீநகர், ஆவின்நகர், பாண்டியன் நகர், நாகனாகுளம், நாராயணபுரம். மாணிக்கம்பட்டி.

மாலை 4-6: குன்னத்தூர், சோலைப்பட்டி, பாப்புநாயக்கன்பட்டி,பிஆர்பி நகர், கல்லம்பட்டி, தெற்குத்தெரு, பெரியரேக்குண்டு,சின்னரேக்குண்டு, பல்கலைநகர், வடபழஞ்சி, ஆஸ்டின்பட்டி, தோப்பூர், தனக்கன்குளம், முல்லைநகர், தியாகராசர் மில்காலனி, இந்திராநகர், நேதாஜிநகர், புளியங்குளம், அழகர்கோவில், வாடிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.