திண்டுக்கல், ஜூலை 30: நத்தம் வட்டம் சின்னகாசம்பட்டியைச் சேர்நத காத்தான் மனைவி லலிதா (25). இவர் சில நாள்களாக உடல்நலம் சரியின்றி இருந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நத்தம் போலீஸôர் விசாரிக்கின்றனர்.